ஆட்டோமொபைல்
2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட்

2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-07-30 10:00 GMT   |   Update On 2019-07-30 10:00 GMT
போர்ஷ் இந்தியா நிறுவனம் 2019 மசான் ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



போர்ஷ் இந்தியா நிறுவனம் 2019 மசான் ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட் மசான் மற்றும் மசான் எஸ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

போர்ஷ் மசான் ஸ்டான்டர்டு மாடல் ரூ. 69.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் ரக மசான் எஸ் மாடல் ரூ. 85.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஜூன் மாதம் துவங்கிய நிலையில், இவற்றின் விநியோகம் வரும் வாரங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட் மாடல்: மியாமி புளு, மேம்பா கிரீன் மெட்டாலிக், டோலோமைட் சில்வர் மெட்டாலிக் மற்றும் கிரேயான் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. 20-இன்ச் வீல், 21 இன்ச் வீல் என இருவித ஆபர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.



புதிய 2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறம்: 11-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் போர்ஷ் கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் மற்றும் கனெக்ட் பிளஸ் மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது.

2019 போர்ஷ் மசான் ஸ்டான்டர்டு மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்-லைன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 245 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மசான் எஸ் மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த எனி்ஜின் 348 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 7-ஸ்பீடு பி.டி.கே. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News