லைஃப்ஸ்டைல்
நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்க இதை பயன்படுத்தலாம்...

நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்க இதை பயன்படுத்தலாம்...

Published On 2021-07-06 08:44 GMT   |   Update On 2021-07-06 08:44 GMT
அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.
விரல் நகங்களில் அழகுக்காக பூசப்படும் நக பாலீஷ் சில நாட்களில் பொலிவை இழக்க தொடங்கிவிடும். நகங்களில் இருந்து உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கும். அதனை பலரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.

பற்பசை: நக பாலீஷை நீக்குவதற்கு பற்பசையை கூட பயன்படுத்தலாம். பொதுவாக பற்பசையில் எத்தில் அசிடேட் கலந்திருக்கும். இது நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். பல் துலக்கப்பயன்படுத்தப்பட்ட பழைய பிரஷில் சிறிதளவு பற்பசையை தடவி நகங்களில் படர்ந்திருக்கும் நக பாலீஷ் மீது தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை நன்றாக அழுத்தி தேய்த்தால் நக பாலீஷ் உதிர்ந்து வந்துவிடும். நகமும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.

வாசனை திரவியம்: நக பாலீஷை நீக்குவதற்கு வாசனை திரவியத்தையும் உபயோகிக்கலாம். டிஸ்யூ பேப்பரில் சில துளிகள் வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு அது ஆவியாகும் முன்பு நகங்களில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண் டும். ஓரிரு முறை அவ்வாறு தேய்த்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.

ஹேர் ஸ்பிரே: பெரும் பாலான ஸ்பிரேக்களில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நக பாலீஷை நீர்த்துபோக செய்ய உதவும். நகங்களில் சிறிதளவு ஸ்பிரே தெளித்து காட்டன் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு அழுத்தி தேய்க்க வேண் டும். நகங்களில் தெளிக்கும் ஸ்பிரே ஆவி ஆவதற்கு முன்பு ஓரிருமுறை தேய்த்துவிட்டால் போதும். நக பாலீஷ் நீங்கிவிடும்.

சானிடைசர்: கொரோனா வைரஸ் தொற்றுவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கைகளில் உபயோகப்படுத்தும் சானிடைசரையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சிறிதளவு சானிடைசரை ஒற்றி எடுத்து நக பாலீஷ் மீது அழுத்தி தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை அவ்வாறு செய்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
Tags:    

Similar News