செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

சீனா மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறிவிட்டது - டிரம்ப்

Published On 2020-08-06 18:08 GMT   |   Update On 2020-08-06 18:08 GMT
கொரோனா வைரசுக்கு பிறகு சீனாவின் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் தொடங்கியது இந்த பிரச்சனை.

அதன் பின்னர் தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன அரசின் அடக்குமுறை, ஹாங்காங்கின் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகள் என ஒவ்வொன்றாக இரு நாடுகளின் உறவை பலவீனமாக்கியது.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று கொரோனா வைரஸ் இரு நாடுகளுக்கு தீரா பகையை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவும், அதை சீனா வேண்டுமென்றே பிற நாடுகளுக்கு பரப்பி விட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு பிறகு சீனாவின் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் நோய் தாக்கியதில் இருந்து சீனா மீதான நமது அணுகுமுறை பெரிதும் மாறிவிட்டது என்று நினைக்கிறேன். கொரோனா வைரசை அவர்களால் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. எனவே நாங்கள் வித்தியாசமாக உணர்கிறோம்’’ என கூறினார்.
Tags:    

Similar News