செய்திகள்
பாதுகாப்பு பணியில் போலீசார்

காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது - நாசவேலை முறியடிப்பு

Published On 2021-01-10 21:26 GMT   |   Update On 2021-01-10 21:26 GMT
ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் இருந்த மோட்டார் சைக்கிளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நாசவேலைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராஷ்டிரீய ரைபிள் படையினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மெந்தூர் செக்டாரில் உள்ள கோலத் ரீலன்-மெந்தூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு வீரர்கள் சந்தேகத்தின் பேரில் ஒரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ எடையுள்ள கையெறி குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய வீரர்கள், அதில் இருந்த கையெறி குண்டுகளை பத்திரமாக அகற்றி செயலிழக்கச் செய்தனர்.

இதன்மூலம் பயங்கரவாதிகளின் நாசவேலை முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான பயங்கரவாதிகளை வனப்பகுதிக்கு சென்று தேடி வருவதாகவும் பூஞ்ச் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அங்க்ரால் தெரிவித்தார்.
Tags:    

Similar News