செய்திகள்
யோகி ஆதித்யநாத்

கிருஷ்ண பகவான் பிறந்த மதுராவில் மது, இறைச்சிக்கு தடை

Published On 2021-09-11 02:05 GMT   |   Update On 2021-09-11 02:40 GMT
மதுராவில் மது, இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோர் அதற்கு பதிலாக பால் விற்பனையை தொடங்குமாறு யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரா :

கிருஷ்ண பகவான் பிறந்த மதுராவில் மது, இறைச்சி விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஜென்மாஷ்டமியையொட்டி கடந்த 30-ந்தேதி மதுரா சென்றிருந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்த கோரிக்கையை ஏற்று விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவித்து இருந்தார்.

அதன்படி மதுராவை சுற்றிலும் 10 கி.மீ. சுற்றளவு பகுதியில் மது, இறைச்சிக்கு தடை விதித்து மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.

இதற்கு மத தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக, மதுராவில் மது, இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோர் அதற்கு பதிலாக பால் விற்பனையை தொடங்குமாறு யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மதுராவில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

Tags:    

Similar News