செய்திகள்
புகார்கள்

2 நாட்களில் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு குவிந்த 2721 புகார்கள்

Published On 2021-11-27 09:21 GMT   |   Update On 2021-11-27 09:21 GMT
மழைநீர் தேங்கியதாக 414 புகார்கள் பெறப்பட்டதில் 223 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 191 இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை:

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் குவிகின்றன. கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் 150 ஊழியர்கள் உடன் செயல்படுகிறது.

1913 இலவச புகார் எண் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் தகவலை பெற்று அதனை சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுகிறது.

25-ந் தேதி காலை 6 மணி முதல் 26-ந் தேதி காலை 6 மணி வரை 625 புகார்கள் இந்த மையத்திற்கு வந்தன அவற்றில் 406 புகார்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 219 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மழைநீர் தேங்கியதாக 414 புகார்கள் பெறப்பட்டதில் 223 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 191 இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தெரு விளக்கு எரியவில்லை என்று 165 புகார்கள் வந்தன. அதில் 15 தவிர 150 இடங்களில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த 15 தெரு விளக்குகளும் தண்ணீர் அதிகம் இருப்பதால் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 1,599 புகார்கள் வந்தன. அதில் 689 புகார் மீது நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. இதுவரையில் 2721 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த 2 நாட்களில் வந்துள்ளன.

இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரையில் 497 புகார்கள் வந்திருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும் புகார் அடிப்படையில் வேகமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தண்ணீர் புகுதல், மரம் விழுதல், சாலையில் பள்ளம் போன்ற தகவல்களை பொதுமக்கள் 1913 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News