ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

பி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்

Published On 2019-10-15 09:24 GMT   |   Update On 2019-10-15 09:24 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டு கார்களில் பி.எஸ். 6 ரக என்ஜின் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஏப்ரல் 2020 முதல் விற்பனைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த விதிகளுக்கு பொருந்த வேண்டும் என்பதால், பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பி.எஸ். 6 அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டத் துவங்கியுள்ளன.

பலேனோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா, எக்ஸ்.எல்.6 மற்றும் சமீபத்தில் அறிமுகமான எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்கள் பி.எஸ். 6 ரக என்ஜின்களை கொண்டிருக்கின்றன. மாருதி சுசுகி நிறுவன விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு இயக்குனர் சஷான்க் ஸ்ரீவத்சவா விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் கிராஸ் மாடல்களும் விரைவில் பி.எஸ். 6 அப்டேட் பெறும் என தெரிவித்தார்.



தற்சமயம் டீசல் வேரியண்ட் மட்டும் விற்பனை செய்யப்படும் கார்களில் 1.5 லி்ட்டர் K சீரிஸ் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இது 104 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷன் கொண்டிருக்கின்றன.

இதே என்ஜின் மாருதி சுசுகியின் சியாஸ், எர்டிகா மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்.எல்.6 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளன. சிறிய டீசல் என்ஜின் கொண்டிருக்கும் வாகனங்கள் பி.எஸ். 6 அப்டேட் பெறாது என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டீசல் வாகனங்களை பி.எஸ். 4 இல் இருந்து பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதற்கான கட்டணம் அதிகம் என்பதால் அப்டேட் வழங்கும் திட்டமில்லை என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் பற்றிய விவரங்கள் வெளியாகலாம்.
Tags:    

Similar News