தொழில்நுட்பம்
ரெட்மி 8

விரைவில் அறிமுகமாகும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்

Published On 2020-05-09 07:18 GMT   |   Update On 2020-05-09 07:18 GMT
ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சமீபத்தில் இவை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், ரெட்மி பிராண்டு ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்எஃப் எக்ஸ்போஷர் வலைதளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் M2004J19G எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர M2004J19C எனும் மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் 3சி சான்று பெற்றுள்ளது. இது சீன சந்தைக்கான ரெட்மி 9 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.



இந்த மாடலுக்கு 10 வாட் சார்ஜர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக வெளியான தகவல்களின் படி ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மெர்லின் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News