தொழில்நுட்பம்
பிக்சல் 3ஏ

கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் விற்பனை நிறுத்தம்

Published On 2020-07-02 11:20 GMT   |   Update On 2020-07-02 11:20 GMT
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.


கூகுள் நிறுவனம் பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் மாடல்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

இரு ஸ்மார்ட்போன்களும் இனி கூகுள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படாது. அந்த வகையில் இரு பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கும்.  

கூகுள் ஸ்டோர் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன்களின் விற்பனையை முடித்துவிட்டது. இன்னமும் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புவோர் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். என கூகுள் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

பிக்சல் 3ஏ சீரிஸ் மூலம் கூகுள் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்ய துவங்கியது. பிக்சல் 3ஏ சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட பிக்சல் 4ஏ சீரிஸ் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
Tags:    

Similar News