தொழில்நுட்பம்
இன்

விரைவில் இந்தியா வரும் மைக்ரோமேக்ஸ் இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்

Published On 2021-03-13 06:40 GMT   |   Update On 2021-03-13 06:40 GMT
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது இன் சீரிசில் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இன் சீரிசில் புது ஸ்மார்ட்போன் இன் 1 பெயரில் அறிமுகமாக இருக்கிறது. இந்த மாடல் மார்ச் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து உள்ளது.

இதற்காக மைக்ரோமேக்ஸ் வெளியிட்டு இருக்கும் டீசர்களை கொண்டு பார்க்கும் போது, புது மாடல் மல்டிமீடியா சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் எந்த விவரங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 



எனினும், இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன் 1பி மற்றும் இன் நோட் 1 மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. முந்தைய இன் நோட் 1 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் 4 ஜிபி ரேம் கொண்டிருந்தது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டது.
Tags:    

Similar News