லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

தோள்பட்டை, கைத்தசைகளை வலுவாக்கும் பயிற்சி

Published On 2019-11-28 03:38 GMT   |   Update On 2019-11-28 03:38 GMT
இப்பயிற்சியில் கைகளில் எடையைத் தூக்கி செய்வதால், தோள்பட்டை மற்றும் கைத் தசைகள் வலுவடைகின்றன. இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.
விரிப்பில் மல்லாந்து படுத்து கால்களை நன்றாக இடுப்புக்கு நேராக மடக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கையால் கெட்டில்பெல்லின் பிடியை பிடித்துக்கொண்டு கை முட்டியை தரையில் ஊன்றி, ‘L’ வடிவில் வைத்துக் கொள்ளவும். இப்போது மெதுவாக கைகளின் மணிக்கட்டுப்பகுதியை உட்புறமாக வளைத்து, கைகளை தோள்களுக்கு நேராக உயர்த்திப் பிடிக்கவும். பின்னர் மீண்டும் மெதுவாக பழைய நிலைக்கு கைகளை கீழே இறக்கவும். இதுபோல் 6 முதல் 8 முறை செய்யலாம்.

பலன்கள் :

இப்பயிற்சியில் கைகளில் எடையைத் தூக்கி செய்வதால், தோள்பட்டை மற்றும் கைத் தசைகள் வலுவடைகின்றன. மார்பு விரிவடைவதால் சுவாசப் பிரச்னைகள் சீராகிறது. தோள்வலி, கைவலிகளுக்கு தீர்வாகிறது. மேல்உடலின் அனைத்து தசைகளும் வலுவடைகின்றன.
Tags:    

Similar News