உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் தனியார் நிறுவனத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கிருமி நாசினி தெளிக்கும் மாநகர

கன்னியாகுமரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்குகிறது

Published On 2022-01-13 09:42 GMT   |   Update On 2022-01-13 09:42 GMT
குமரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்குகிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட் களாக தினசரி பாதிப்பு 400-க்கு மேல் இருந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் களப் பணியாளர்கள் மூல மாகவும் சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் 3958 பேரின் சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 474 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு 50-ஐ நெருங்கி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நெல்லை தூத்துக்குடியில் இருந்து வந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

கேரளாவிலிருந்து வந்த நான்கு பேருக்கும் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.கொரோனா பாதிக்கப்பட்ட 474 பேரில் 287 பேர் ஆண்கள் 187 பேர் பெண்கள் 20பேர் குழந்தைகள்ஆவார்கள். கடந்த சில நாட்களாக குழந்தைகள் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
 
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையிலும் ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காகவும் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பாதிப்பு அதிக மாகி வருகிறது. முஞ் சிறை, திருவட்டார், தக்கலை, குருந்தன்கோடு பகுதிகளில் நாளுக்கு நாள் பாதிக் கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

நாகர்கோவில் நகரில் கொரோனா பாதிப்பு கொத்துக் கொத்தாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வந்த நிலையில் நேற்று மேலும் 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அரசு அலுவலர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் தபால் நிலைய ஊழியர்கள் என பலதரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 8 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பாதிப்பு அதிக முள்ள பகுதிகளில் மாநக ராட்சி சுகாதார ஊழியர் கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும் கொரோனா பாதித்த வர்கள் வீடுகளில் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

இரணியல் அருகே குழந்தைகள் நல மருத்துவரின் மகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் டாக்டருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி மற்றும் மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாபரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க தேவை யான வசதிகளை மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அரசு ஆஸ்பத் திரி மற்றும் தனியார் ஆஸ்பத் திரிகளில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 
கொரோனாவை கட்டுப் படுத்த பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

தடுப்பூசி செலுத்தாதவர் கள் உடனடியாக அந் தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News