உள்ளூர் செய்திகள்
விபத்து

மேல்மருவத்தூரில் டிராக்டர் மீது மோதி லாரி கவிழ்ந்தது- போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-05-05 06:48 GMT   |   Update On 2022-05-05 06:48 GMT
மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம், இரட்டை ஏரி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி திடீரென டிராக்டர் மீது மோதியது.
மதுராந்தகம்:

செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் நோக்கி இன்று அதிகாலை டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 3 தொழிலாளர்கள் இருந்தனர்.

மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம், இரட்டை ஏரி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி திடீரென டிராக்டர் மீது மோதியது.

அந்த நேரத்தில் பின்னால் வந்த ஆம்னி பஸ்சும் லாரி மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் லாரியும், டிராக்டரும் சாலையில் கவிழ்ந்தது.

டிராக்டரில் இருந்த 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இந்த விபத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த 3 பேரும் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News