செய்திகள்
மத்திய அரசு

21 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

Published On 2019-11-27 00:48 GMT   |   Update On 2019-11-27 00:48 GMT
மத்திய அரசின்கீழ் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் குரூப்-பி அதிகாரிகள் 21 பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின்கீழ் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சி.பி.டி.டீ.) குரூப்-பி அதிகாரிகள் 21 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதன் பேரில் அவர்களுக்கு அதிரடியாக கட்டாய ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்தஸ்தை பெற்றிருந்தவர்கள் ஆவார்கள்.

பொதுநலனை கருத்தில் கொண்டு, ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சட்ட விதி எண். 56(ஜே)-யின் கீழ் அவர்களுக்கு கட்டாய ஓய்வு தரப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வருமான வரி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது இது 5-வது முறை ஆகும். இதுவரை 85 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
Tags:    

Similar News