செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 218 பேருக்கு அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை

Published On 2021-10-27 06:40 GMT   |   Update On 2021-10-27 06:40 GMT
பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டிய 218 பேர் மீது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

சென்னை:

சென்னையில் பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டுவதற்கு ஒவ்வொரு மண்டலங்களிலும் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த இடங்களில் மட்டுமே கழிவுகளை கொட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதை மீறி பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 218 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்று குப்பைகள் கொட்டியதாக ரூ.92 ஆயிரத்து 500-ம், கட்டிட கழிவுகள் கொட்டியதாக ரூ.70 ஆயிரமும் வசூலிக்கப்பட்டன. இதுவரையில் மொத்தம் ரூ.26 லட்சத்து 63 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News