இந்தியா
பாதிக்கப்பட்ட மக்களிடம் போலீஸ் விசாரணை

பீகாரில் கள்ளச் சாராயத்திற்கு பலியான 5 உயிர்கள்

Published On 2022-01-15 05:46 GMT   |   Update On 2022-01-15 05:46 GMT
பொதுமக்கள் அருந்திய சாராயம் விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாட்னா:

மதுவிலக்கு தடைச்சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

இந்நிலையில், நாலந்தா மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பொதுமக்களில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக இறந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த சாராயம் விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News