செய்திகள்
ரேஷன் அரிசி

காட்பாடியில் ரெயிலில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-10-22 10:22 GMT   |   Update On 2021-10-22 10:22 GMT
வேலூர் வேலப்பாடி பகுதியில் கேட்பாரற்று கிடந்த 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாகாயம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
காட்பாடி:

காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் வேலூர் பறக்கும்படை தனி தாசில்தார் கோட்டீஸ்வரன் ஆகியோருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் அவர்கள் நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையம் வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். இதில் பயணிகளின் இருக்கைகளின் கீழே சிறு, சிறு மூட்டைகளாக 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றி திருவலம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

இதேபோல் வேலூர் வேலப்பாடி பகுதியில் கேட்பாரற்று கிடந்த 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாகாயம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News