செய்திகள்
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்

லவ் ஜிகாத்துக்கு எதிராக அவசர சட்டம் - உ.பி. அமைச்சரவை ஒப்புதல்

Published On 2020-11-24 19:25 GMT   |   Update On 2020-11-24 19:25 GMT
உத்தர பிரதேசம் மாநிலத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
லக்னோ:

லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாரதிய ஜனதா தலைவர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, பா.ஜ.க. ஆட்சி புரியும் மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்கள் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்திலும் லவ் ஜிகாத்திற்கு எதிரான அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது. அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்யும்.
Tags:    

Similar News