செய்திகள்
பாஜக துணை தலைவர் அண்ணாமலை

8 மாதத்தில் நீட் தேர்வு ரத்தாகும் என ஸ்டாலின் கூறுவது தவறான தகவல் - அண்ணாமலை பேட்டி

Published On 2020-09-13 10:27 GMT   |   Update On 2020-09-13 10:27 GMT
8 மாதத்தில் நீட் தேர்வு ரத்தாகும் என ஸ்டாலின் கூறுவது தவறான தகவல் என்று பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை:

நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டரில், நீட்தேர்வு அச்சம் காரணமாக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும், இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக துணை தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

8 மாதத்தில் நீட் தேர்வு ரத்தாகும் என ஸ்டாலின் கூறுவது தவறான தகவல். நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் நீதிமன்ற அவமதிப்பாகும். கல்வி வணிகமாக மாறியதை உடைக்கவே கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News