செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்

மூலைக்கரைப்பட்டி அருகே கால்நடை மருத்துவ முகாம் - கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

Published On 2020-11-21 18:18 GMT   |   Update On 2020-11-21 18:18 GMT
தமிழ்நாடு அரசு கால்நடைத் துறை மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில், தமிழ்நாடு அரசு கால்நடைத் துறை மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு முகாமை தொடங்கி வைத்து, சிறந்த கிடாரி கன்றுகள் வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கினார். முகாமில், நோயுற்ற கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், செயற்கை முறை இனவிருத்தி மற்றும் தடுப்பூசிகள் போடும் பணி நடந்தது.

நெல்லை கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் முகமது காலித், துணை இயக்குனர் டாக்டர் தியோபிலஸ் ரோஜர், உதவி இயக்குனர் டாக்டர் ஆபிரகாம் ஜாப்ரி ஞானராஜ், கால்நடை டாக்டர்கள் மாரியப்பன், பரமசிவன், கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் செல்லப்பாண்டியன், அருள்நாதன், டி.வி.எஸ். கள இயக்குனர் முருகன், நாங்குநேரி தாசில்தார் நல்லையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், கருணாவதி, மண்டல துணை தாசில்தார் கணேசன், வருவாய் ஆய்வாளர் அய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பெருமாள், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், மூலைக்கரைப்பட்டி நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News