தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி 9ஐ

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாகும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2022-01-13 10:34 GMT   |   Update On 2022-01-13 10:34 GMT
ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய ரியல்மி 9ஐ இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் வியட்நாம் மற்றும் தாய்லாந்து சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 9ஐ மாடலில் 6.6 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. போர்டிரெயிட் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.



புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் புளு குவாட்ஸ் மற்றும் பிளாக் குவாட்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.
Tags:    

Similar News