ஆன்மிகம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி

Published On 2021-05-03 04:13 GMT   |   Update On 2021-05-03 04:13 GMT
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவை காணவும், சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் குடியாத்தம் வருவார்கள்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவை காணவும், சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் குடியாத்தம் வருவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததால், தமிழக அரசு அறிவித்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவு பக்தர்களை கொண்டு சமூக இடைவெளியுடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி, தேரோட்டம், கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்,, பூபல்லக்கு ஆகிய விழாக்கள் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.

அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அறிவித்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நேற்று காலை கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி குறைந்த அளவு பக்தர்களை கொண்டு, சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் கோவில் வளாகத்தை சுற்றி வந்து மூலவர் சன்னதி அடைந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர்நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், ஊர் தர்மகர்த்தா கே.பிச்சாண்டி திருப்பணிக்குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

வருகிற 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும், 17-ந் தேதி பூப்பல்லக்கும் கோவில் வளாகத்திலேயே அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News