செய்திகள்
பாஜக கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி பபுல் சுப்ரியா

2021-க்கு பிறகு சிறைச்சாலை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகமாக இருக்கும் - பாஜக மந்திரி பேச்சு

Published On 2021-01-02 16:04 GMT   |   Update On 2021-01-02 16:04 GMT
2021-ம் ஆண்டுக்கு பிறகு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தை கொண்ட அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருக்கும் என பாஜக-வை சேர்ந்த மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடபெற உள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில் இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இதனால், திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதில் இருந்தே தேர்தல் பிரசாரத்தை இரு கட்சிகளும் தொடங்கியுள்ளன. பிரசார கூட்டங்களின் போது இரு கட்சிகளுக்கும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.



இந்நிலையில், மேற்குவங்காள பாஜக தலைவர்களின் ஒருவரும், மத்திய மந்திரியுமான பபுல் சுப்ரியா அம்மாநிலத்தின் புர்பா மதினிப்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். 

அந்த கூட்டத்தில் பேசிய பாஜக கட்சியை சேர்ந்த மத்திய மதிரி பாபுல் சுப்ரியா, ’2021-ம் ஆண்டுக்கு பிறகு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தை கொண்ட அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருக்கும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் அங்கு (சிறைச்சாலை) தான் தங்குவார்கள்’ என்றார்.
Tags:    

Similar News