செய்திகள்
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்

பயங்கரவாத அச்சுறுத்தல்: மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடல்

Published On 2019-08-26 14:38 GMT   |   Update On 2019-08-26 14:38 GMT
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு, கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாறைக்குன்றின் மீது கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம். கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் அழகிய தோற்றத்தையும், புராதன சின்னங்களையும், கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தையும் கண்டுகளிக்கலாம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இவற்றை கண்டுகளிக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

தற்போது தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் முக்கிய பகுதிகளில் நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து, கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மற்றும் கடல்சார் அருங்காட்சியகம் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பு நோட்டீசும் கலங்கரை விளக்கத்தின் நுழைவு வாயில் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.
Tags:    

Similar News