செய்திகள்
கோப்புப்படம்

புதுவையில் தொடர் மழையால் 61 ஏரிகள் நிரம்பியது

Published On 2020-12-11 11:02 GMT   |   Update On 2020-12-11 11:02 GMT
கனமழையின் காரணமாக புதுவையில் 61 ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் நிவர் புயலால் 42 ஆண்டுகளுக்கு பிறகு 30 செ.மீ. மழை பதிவாகியது.

இதனைத்தொடர்ந்த வந்த புரெவி புயல் காரணமாக தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக புதுவை வெள்ளக்காடாக மாறியது. சாலைகள் அனைத்தும் மழையால் சேதமடைந்தது.

புதுவையில் பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர் ஏரி உள்பட 84 ஏரிகள் உள்ளது. கனமழையின் காரணமாக புதுவையில் 61 ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஊசுட்டேரி முழு கொள்ளளவான 3.50 மீட்டரரையும், பாகூர் ஏரி முழு கொள்ளளவான 3.60 மீட்டரையும் எட்டியுள்ளது.

காட்டேரிக்குப்பம் ஏரி, சுத்துக்கேணி பெரிய ஏரி, தொண்டமாநத்தம் வெள்ளேரி, தொண்ட மாநத்தம் கடப்பேரி, வேல்ராம்பட்டு ஏரி, உழந்தை ஏரி, அபிஷேகப்பாக்கம் ஏரி, மணமேடு ஏரி, கிருமாம் பாக்கம் ஏரி, உச்சிமேடு ஏரி, மேல்பரிக்கல்பட்டு ஏரி, அரங்கனூர் ஏரி, கனகன் ஏரி உள்ளிட்ட 61 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
Tags:    

Similar News