ஆன்மிகம்
சித்திவிநாயகர் கோவில்

சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

Published On 2021-02-27 04:12 GMT   |   Update On 2021-02-27 04:12 GMT
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக வருகிற 1-ந் தேதி முதல் சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மும்பை :

மும்பையில் பிப்ரவரி முதல் வாரம் வரை கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் பாதிப்பு 1,100-ஐ தாண்டியது. இதையடுத்து அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சித்தி விநாயகா் கோவில் அறக்கட்டளை அறிவித்து உள்ளது.

மேலும் இதுகுறித்து அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பிரியங்கா சாப்வாலே கூறுகையில், ‘‘ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு கூட கியு-ஆர் கோடு வழங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதித்து வந்தோம். 1-ந் தேதி முதல் இதை முற்றிலும் நிறுத்த முடிவு செய்து உள்ளோம். மறுஉத்தரவு வரும் வரை முன்பதிவு செய்யாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் ஒரு மணி நேரத்துக்கு 100 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அன்கார்கி சதுர்த்தி (2-ந் தேதி) அன்று பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 9 வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.

ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மும்பையில் பிரசித்தி பெற்ற மாகிம் தேவாலயம், சர்ச்கேட் ஒவல் மைதானம் போன்றவை மீண்டும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News