உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2022-01-13 08:27 GMT   |   Update On 2022-01-13 08:28 GMT
வைகுண்ட ஏகாதசி விழா பல்வேறு அலங்காரங்களில் பூமி நீளாநாயகி சமேத சீனிவாசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர்:

கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு.ஸ்ரீ தேவி, பூமிதேவி தாயார் சமேத ஸ்ரீ வீரராக வப்பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தார். சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அதிகாலை 3:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து காலை 5:30 மணிக்கு கருட வாகனத்தில்  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி  பெருமாள்  சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்ப £லித்தார். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவீதியுலா ரத்துசெய்யப்பட்டுள்ளது. கோவில் மண்டபத்துக்குள் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் திருமஞ்சன பூஜை மற்றும் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி  பக்தர்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகின்றனர்.

அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் உற்சவருக்கு, மகா திருமஞ்சனம் நடைபெற்றது இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று நம்மாழ்வார் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 

ஸ்ரீ உத்தர வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமோதரகராக உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளினர் அலங்கரிக் கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீ உத்தர வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி உற்சவ மூர்த்திகள் கோவிலின் உட்பிரகாரத்தில் சுற்றிலும் வலம்வந்து பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற சரணகோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உடுமலை, நவநீதகிருஷ்ணநவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, பல்வேறு அலங்காரங்களில், பூமி நீளாநாயகி சமேத சீனிவாசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில், இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
Tags:    

Similar News