செய்திகள்
மெட்ரோ ரெயில்

வருமானத்தை பெருக்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் தனியார் கடை-அலுவலகங்கள்

Published On 2021-08-21 09:29 GMT   |   Update On 2021-08-21 09:29 GMT
ஏற்கனவே விமான நிலையம், கிண்டி, ஆலந்தூர், வடபழனி, கோயம்பேடு, ரெயில் நிலையங்களில் தனியார் கடைகளை தொடங்கி நடத்தி வந்தார்கள்.
சென்னை:

சென்னையில் விமான நிலையம்-விம்கோநகர், பரங்கிமலை-சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த இரண்டு வழித்தடங்களிலும் 39 ரெயில் நிலையங்கள் உள்ளன. மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தும் இடங்களை தவிர மற்ற இடங்களில் கடைகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களை தனியார்கள் நடத்துவதற்காக வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே விமான நிலையம், கிண்டி, ஆலந்தூர், வடபழனி, கோயம்பேடு, ரெயில் நிலையங்களில் தனியார் கடைகளை தொடங்கி நடத்தி வந்தார்கள்.

கொரோனா காரணமாக அதில் ஒரு சில கடைகள் மூடப்பட்டு விட்டன. சில கடைகளின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News