செய்திகள்
கல்லூரி மாணவர் ஜெகதீஷ்

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2019-10-08 07:07 GMT   |   Update On 2019-10-08 07:07 GMT
ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி கல்லூரி மாணவரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்கோட்டை:

வில்லிவாக்கம் தாந்தோனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் ஜெகதீஷ் (வயது 19). சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது உறவினர் ஒருவர் ஊத்துக்கோட்டையில் இறந்ததையடுத்து 6-ம் நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெகதீஷ் தனது நண்பர்களுடன் சென்றார். பின்னர் ஜெகதீசும், அவரது நண்பர்களும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி கிராமத்தில் கிருஷ்ணா கால்வாயில் குளித்தனர்.

தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கால்வாயில் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஜெகதீசை தண்ணீர் இழுத்துச் சென்றது. இதனை கண்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். ஜெகதீசை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இது குறித்து பென்னாலூர் பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், திருவள்ளூர் தீ ணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பூண்டி ஏரியில் பிணமாக மிதந்த ஜெகதீசின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் யாரும் குளிக்கக் கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் நெடுகிலும் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனர். இதையும் மீறி ஜெகதீஷ் குளித்து பலியாகிவிட்டார்.
Tags:    

Similar News