செய்திகள்
கோப்புபடம்

பாகிஸ்தானில் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

Published On 2021-09-12 20:13 GMT   |   Update On 2021-09-12 20:13 GMT
கராச்சி உள்பட சிந்த் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மித அளவில் இருந்து கனமழை பெய்ய கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
லாகூர்:

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோர் கார் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால், மழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 11 பேர் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கனமழையால், 5 வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.  கராச்சி உள்பட சிந்த் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மித அளவில் இருந்து கனமழை பெய்ய கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதேபோன்று, பாகிஸ்தானின் தர்பார்க்கர், படின், தட்டா, உமர்கோட், சங்கார், மீர்புர்க்காஸ், ஷாகீத் பெனாசிராபாத், ஜாம்சோரோ, கைர்பூர் மற்றும் ஐதராபாத் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்றும் அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
Tags:    

Similar News