உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவினாசி கோவில் தேர் திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை

Published On 2022-05-06 04:13 GMT   |   Update On 2022-05-06 04:13 GMT
தேரோட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள்கு றிப்பிட்ட இடத்தில் தேரை நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அவிநாசி:

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக கருதப்படும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

இந்தாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர்த்திருவிழா வருகிற 12,13, 14 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. தேர்த்திருவிழா மற்றும் தேரோட்டம் குறித்து தாசில்தார் ராகவி தலைமையில் ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

கோவில் நிர்வாகத்தினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விடுவது, தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது .

நெடுஞ்சாலை துறையினர் சார்பில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தேரோட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் குறிப்பிட்ட இடத்தில் தேரை நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News