ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு

Published On 2019-12-16 06:05 GMT   |   Update On 2019-12-16 06:05 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். அதன்படி கடந்த 13-ந் தேதி முதல் நேற்று வரை சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற்றது. 13-ந்தேதி தாயார் சன்னதியிலும், நேற்று முன்தினம் சக்கரத்தாழ்வார் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற்றது.

நேற்று பெருமாள் சன்னதியில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அர்ச்சகர்கள் நந்து பட்டர், ராகவன் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். சகஸ்ர தீப வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றினர். 
Tags:    

Similar News