ஆட்டோமொபைல்

விரைவில் வெளியாகும் டாடா டியாகோ அக்டிவ் கிராஸ்ஓவர்

Published On 2018-03-02 11:18 GMT   |   Update On 2018-03-02 11:18 GMT
டாடா டியாகோ அக்டிவ் கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் விற்பனையாளரிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது, அதன் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது.
புதுடெல்லி:

ஆட்டோ எக்ஸ்போ 2016-இல் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ அக்டிவ் மாடல் சிகா என்ற பெயர் கொண்டிருந்தது. புதிய டியாகோ அக்டிவ் கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் விற்பனையாளரிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.

2016 அதிகாரப்பூர்வ அறிமுகத்தை தொடர்ந்து இந்த மாடல் குறித்து வெளியாகி இருக்கும் முதல் தகவல் இது ஆகும். புதிய டாடா டியாகோ அக்டிவ் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. டியாகோ மாடலில் அக்டிவ் கிட் டியாகோ கிராஸ்ஓவர் மாடலுக்கு கம்பீர தோற்றத்தை வழங்குகிறது.

அக்டிவ் கிட் புதிய லோவர் மற்றும் பின்புற பம்ப்பர்கள், க்ரோம் பெயின்ட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஸ்கிட் பிளேட்கள், சைடு அன்டர்பாடி பிளாஸ்டிக் மோல்டிங் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக் மாடல் மாருதி சுசுகி செலரியோ X மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.



டாடா மோட்டார்ஸ் புதிய மாடலின் விலையை அறிவிக்காத நிலையில், இதன் விலை ரூ.30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக டாடா டியாகோ உதிரி பாகங்களும் வழங்கப்படுகிறது. இவற்றில் அலாய் வீல்கள், படிள் லேம்ப், மூட் லைட்டிங், ஃபாக் லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்., இலுமினேட்டெட் லோகோ, டோர் விசோர், க்ரோம் கிட் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ JTP பெர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 109.5PS / 150 NM செயல்திறன் கொண்டுள்ளது.
Tags:    

Similar News