தொழில்நுட்பம்

ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடும் தாமதமாகிறது

Published On 2019-06-16 04:46 GMT   |   Update On 2019-06-16 04:46 GMT
ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதமாகிறது.



ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மேட் எக்ஸ் என்ற பெயரில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற சர்வதேத மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை முன்கூட்டியே அறிமுகம் செய்தது. எனினும், சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் இதுவரை விற்பனைக்கு வரவில்லை. கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் கோளாறு கண்டறியப்பட்டதால், அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு, பின்னர் வெளியிடப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது.

சாம்சங் போன்று இக்கட்டான சூழ்நிலையில் சிக்காமல் இருக்க ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை சில மாத்தங்களுக்கு ஒத்துவைத்துள்ளது. கேலக்ஸி ஃபோல்டு எதிர்கொண்ட பிரச்சனைகளை பார்த்து மேட் எக்ஸ் வெளியீட்டை ஹூவாய் தள்ளிவைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.



சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை முதற்கட்டமாக விமர்சனம் செய்வோருக்கு பிரத்யேகமாக வழங்கியது. விமர்சனங்களின் போது செய்யப்பட்ட சோதனைகளில் கேலக்ஸி ஃபோல்டு டிஸ்ப்ளே எளிதில் உடைந்து போனது. இதன் காரணமாக அவற்றின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்களில் எவ்வித கோளாறும் ஏற்படக் கூடாது என்பதை உறுதி செய்ய ஹூவாய் அவற்றை மீண்டும் சோதனை செய்ய துவங்கி இருக்கிறது. இதுதவிர மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் வெளியாக இருப்பதால், ஏற்கனவே 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் இதன் விற்பனை முதற்கட்டமாக துவங்கும்.
Tags:    

Similar News