செய்திகள்

சிவகாசி அருகே குடோனில் பதுக்கிய ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2019-01-11 09:19 GMT   |   Update On 2019-01-11 09:20 GMT
குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்:

தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தபோதிலும் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் மெத்தனத்தால் சர்வ சாதாரணமாக கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.

இதை தடுக்க போலீசாரும் அவ்வப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

சிவகாசி போலீசார் நேற்று சாத்தூர்-சிவகாசி ரோட்டில் உள்ள பாரப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வேனில் இருந்த சாத்தூர் நெல்மேனியை சேர்ந்த சரவணமணிகண்டன் (வயது30), ராமகுருநாதன் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது புகையிலை பொருட்களை சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்ல இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சிவகாசியை சேர்ந்த சரவணக்குமாரை என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News