செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர்

ஆக்சிஜன் சிலிண்டருக்கு இது தான் மாற்று என கூறி வைரலாகும் வீடியோ

Published On 2021-04-28 05:27 GMT   |   Update On 2021-04-28 05:27 GMT
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரவுகள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

கொரோனாவைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் லிக்விட் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் சிலிண்டருக்கு மாற்றாக நெபுலைசர் கருவி சிறப்பாக செயல்படும் என முன்கள பணியாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவில் அந்த நபர், `மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படுவதை கண்டு வருத்தமாக உள்ளது. பின் ஆக்சிஜன் சிலிண்டருக்கு மாற்றாக நெபுலைசரை பயன்படுத்தலாம்,' என கூறி நெபுலைசர் எவ்வாறு செயல்படுகிறது என கூறும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.



இவர் கூறிய தகவல் உண்மையென கூறி பலர் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றிய விவரங்களை ஆய்வு செய்ததில், நெபுலைசர் ஆக்சிஜன் சிலிண்டருக்கு மாற்று இல்லை என தெரியவந்துள்ளது. பல்வேறு மருத்துவர்கள் இந்த வழிமுறை சரியானது இல்லை என தெரிவித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து வீடியோவில் இந்த யோசனையை தெரிவித்த மருத்துவரும் மற்றொரு வீடியோவில் தான் கூறிய தகவல்கள் தவறானவை என தெரிவித்து இருக்கிறார். நெபுலைசர் மருந்துகளை ஓரளவு உட்புக செய்யும். ஆனால் ஆக்சிஜன் தேவையை அது பூர்த்தி செய்யாது. அந்த வகையில் ஆக்சிஜன்  சிலிண்டருக்கு சரியான மாற்றாக நெபுலைசர் கிடையாது என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News