செய்திகள்
சேகர் ரெட்டி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரம்- சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு ரத்து

Published On 2020-09-29 04:03 GMT   |   Update On 2020-09-29 07:13 GMT
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அவருடைய வீட்டில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோடி கணக்கில் கைப்பற்றப்பட்டன.

இதை தொடர்ந்து சேகர் ரெட்டி மற்றும் அவருடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

 இந்த புகார் தொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் அவருடைய நண்பர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ரூ.24 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக லாபம் அடைந்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சேகர் ரெட்டி உள்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் மீதான வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

இதை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ. நீதிபதி ஜவகர், சேகர் ரெட்டி உள்பட 6 பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.


Tags:    

Similar News