ஆன்மிகம்
மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் தேரோட்டம்

Published On 2021-11-17 06:55 GMT   |   Update On 2021-11-17 06:55 GMT
துலா உற்சவத்தையொட்டி திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில் 5-வது அரங்கமாகவும் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பரிமள ரெங்கநாதர் தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதை தொடர்ந்து தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என பக்தி கோஷமிட்டு இழுத்தனர்.

தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. மதியம் பரிமள ெரங்கநாத பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
Tags:    

Similar News