செய்திகள்
அதிபர் டொனால்டு டிரம்ப் (கோப்பு படம்)

தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிட்டேன் - டிரம்ப் அதிரடி டுவீட்

Published On 2020-11-16 17:20 GMT   |   Update On 2020-11-16 18:06 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றதாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 232 தேர்தல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தபோதும் தனது தோல்வியை ஏற்க அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ஜோ பைடனின் வெற்றி என்பது மோசடியான ஒன்று என தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகிறார். டிரம்பின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பேரணி நடத்தி வருகின்றனர். 

இதனால், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் பைடன் ஆதரவாளர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களுக்கும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிட்டேன்’ என தெரிவித்துள்ளார். 

ஆனால், டிரம்பின் பதிவை போலியான தகவல் என்று கூறும் வகையில் அந்த பதிவை மேற்கொள் காட்டி டுவிட்டர் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், ‘அதிகாரப்பூர்வ தகவல்கள் இந்த தேர்தல் முடிவுகளை வேறு விதமாக கூறுகிறது’ என டுவிட்டர் நிறுவனம் பதிவு செய்துள்ளது.


Tags:    

Similar News