செய்திகள்
கோப்புபடம்

அமராவதிபாளையம் சந்தையில் ரூ.90 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

Published On 2021-09-15 05:18 GMT   |   Update On 2021-09-15 05:18 GMT
கால்நடைகளை கட்டி வைக்க இடமில்லாமல் வேன், ஆட்டோக்களில் கட்டி வைத்திருந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையத்தில் நடந்த மாட்டுச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு அமராவதிபாளையத்தில் செயல்படுகிறது. மூன்றாவது வாரமாக இங்கு சந்தை நடந்தது. 

400 மாடுகள், 300 எருமை, 200 கன்றுக்குட்டிகள் என 900 கால்நடைகள் விற்பனைக்கு வந்தன. கால்நடைகளை கட்டி வைக்க இடமில்லாமல் வேன், ஆட்டோக்களில் கட்டி வைத்திருந்தனர். 

உள்ளூர் வியாபாரிகளை காட்டிலும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். வழக்கமாக மாடுகள் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் கன்றுக்குட்டிகள் அதிகளவில் வந்திருந்தது. 

தரமான முதல் ரக கன்றுகுட்டி ரூ. 7,000 வரை விற்றது. மாடுகள் ரூ.25 முதல் ரூ.35 ஆயிரம் வரையும், எருமை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்றன. ரூ. 90 லட்சத்திற்கு   வர்த்தகம் நடந்ததாக சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News