செய்திகள்
கோப்புபடம்

இன்றும், நாளையும் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Published On 2021-10-08 08:21 GMT   |   Update On 2021-10-08 10:53 GMT
10-ந் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும், நாளையும் வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 10-ந் தேதி நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

11-ந் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும்.

12-ந் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வரும் 10-ந் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 15 செ.மீ. பென்னாகரம் 8, சோளிங்கர் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்...தமிழகத்தில் இன்டர்நெட் வசதியுடன் 24 சதவீத பள்ளிகள் செயல்படுகின்றன- யுனெஸ்கோ தகவல்

Tags:    

Similar News