ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் கோவில் வாசலின் முன்புறம் அடைக்கப்பட்டு இருப்பதால், வாசலில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

சித்திரை திருவிழா நிறைவு: மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடந்தன

Published On 2021-04-27 08:02 GMT   |   Update On 2021-04-27 08:02 GMT
தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள்அமலுக்கு வந்தன. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் கடைசி நாளான நேற்று (திங்கட்கிழமை) தீர்த்தவாரி நடைெபற்றது. பொற்றாமரைக்குளத்தில் இந்த தீர்த்தவாரி நடந்தது. இரவில் ரிஷப வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரர் ஆடி வீதிகளை வலம் வந்தனர். இதற்கிடையே நேற்று பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் வாசல் அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோவில் வாசல் முன்பு திருமணங்கள் நடைபெற்றன.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்லாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
Tags:    

Similar News