ஆன்மிகம்
முத்தாரம்மன்

அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் மஞ்சள்நீர் விழா

Published On 2020-12-08 07:01 GMT   |   Update On 2020-12-08 07:01 GMT
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துறைக்குட்பட்ட தேவி முத்தாரம்மன் கோவிலில் மஞ்சள்நீர் விழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துறைக்குட்பட்ட தேவி முத்தாரம்மன் கோவிலில் மஞ்சள்நீர் விழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. 

முதல்நாள் விழாவில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கணபதி ஹோமம், தொடர்ந்து பூஜை, பகல் 12 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு தங்க, வைர நகைகள் அணிவித்து சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு பஜனை, 11 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு ஊட்டு படைத்து அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு காவல் தெய்வங்களுக்கு பொங்கலிடுதல், நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பூஜை, 9 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு பூக்கொடை, பிற்பகல் 2 மணிக்கு முத்தாரம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலம் வருதல், இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு ஆறாட்டு, 8 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News