பெண்கள் மருத்துவம்
ஆண்-பெண் உடல் அமைப்பில் மாறுபட்டிருக்கும் அம்சங்கள்

ஆண்-பெண் உடல் அமைப்பில் மாறுபட்டிருக்கும் அம்சங்கள்

Published On 2022-03-29 08:28 GMT   |   Update On 2022-03-29 08:28 GMT
பலரும் அறியாத வண்ணம் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் சில உடல் உறுப்புகள் இரு பாலருக்கும் வேறுபட்டு இருக்கின்றன. அத்தகைய தனித்துவமான உடல் பண்புகள் குறித்து பார்ப்போம்.
ஆண்களுடன் பெண்களை ஒப்பிடும்போது மார்பகம், பிறப்புறுப்பு, கர்ப்பப்பை, கூந்தல் போன்ற ஒருசில உடல் பாகங்கள் மாறுபட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவை தவிர பலரும் அறியாத வண்ணம் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் சில உடல் உறுப்புகள் இரு பாலருக்கும் வேறுபட்டு இருக்கின்றன. அத்தகைய தனித்துவமான உடல் பண்புகள் குறித்து பார்ப்போம்.

* நோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைபவர்களை ஒப்பிடும்போது பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் இறக்கிறார்கள். மார்பக புற்றுநோய், இனப்பெருக்கம் சார்ந்த கோளாறுகள், கட்டிகள் போன்றவைதான் பெண்களை அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகின்றன. இவை தவிர மற்ற நோய் பாதிப்புக்குள்ளாகி ஆண்கள்தான் அதிகமாக இறக்கிறார்கள்.

* வளர்சிதை மாற்ற விகிதத்தை பொறுத்தவரை பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது.

* எலும்புகளின் கட்டமைப்பும் பாலினத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக பெண்களின் தலை ஆண்களை ஒப்பிடும்போது குறுகியதாக இருக்கும். ஆனால் முகம் அகலமாக இருக்கும். அதுபோல் பெண்களின் கால்கள் குறுகியதாகவும், தண்டு வடம் நீண்டும் காணப்படும். பெண்களின் பற்களை விட ஆண்களின் பற்கள் நீண்ட காலம் நீடித்திருக்கும்.

* ஆண்களை விட பெண்களின் வயிறு, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் பெரியதாக இருக்கும். ஆனால் ஆண்களை விட பெண்களின் நுரையீரல் சிறியதாக இருக்கும். அதாவது நுரையீரலின் கொள்ளளவு ஆண்களை விட 30 சதவீதம் குறைவாகத்தான் அமைந்திருக்கும்.

* பெண்களின் ரத்தத்தில் நீர் அதிகமாக காணப்படும். ஆனால் ரத்த சிவப்பணுக்கள் 20 சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். ரத்த சிவப்பணுக்கள்தான் உடலுக்குள் ஆக்சிஜனை சப்ளை செய்கிறது. அது பெண்களுக்கு குறைவாக இருப்பதால் எளிதில் சோர்வடைந்துவிடுகிறார்கள். ஆண்களை காட்டிலும் சட்டென்று மயக்கம் அடைந்துவிடுகிறார்கள். பெண்களை விட ஆண்கள் 50 சதவீதம் வலிமையானவர்களாகவும் இருக்கிறார்கள்.

* ஆண்களை விட பெண்களுக்கு அதிக வெப்ப நிலையை தாங்கும் சக்தி உண்டு. அவர்களால் கடும் வெயிலிலும் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு வளர்சிதை மாற்றம்தான் காரணம்.

* ஆண்களை விட பெண்கள் மூன்று முக்கியமான உடலியல் செயல்பாடுகளை கொண்டிருக்கிறார்கள். அவை: மாதவிடாய், கர்ப்பம், பாலூட்டுதல். பெண் ஹார்மோன் வடிவங்கள் மிகவும் சிக்கலானவை மற்றும் மாறுபட்டவை. சுரப்பிகளின் செயல்பாடுகளிலும் வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன. உதாரணமாக, பெண்களுக்கு தைராய்டு சுரப்பி பெரியதாக இருக்கும். சுறுசுறுப்பாகவும் செயல்படும். மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலத்தில் விரிவடையும் தன்மை கொண்டது. மேலும் மென்மையான சருமம், முடிகள் இல்லாத உடல், மெல்லிய அடுக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

* பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆண்களை ஒப்பிடும்போது சிரிப்பு, அழுகை என அத்தனை உணர்ச்சிகளையும் சட்டென்று வெளிப்படுத்தும் சுபாவம் கொண்டவர்கள். அதற்கும் ஹார்மோன் செயல்பாடுகள்தான் காரணம்.
Tags:    

Similar News