செய்திகள்
மகாராஷ்டிரா மந்திரி நவாப் மாலிக்

மகாராஷ்டிராவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்

Published On 2021-04-25 10:56 GMT   |   Update On 2021-04-25 10:56 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வதற்காக டெண்டர் கோரப்படும் என்று மந்திரி நவாப் மாலிக் தெரிவித்தார்.
மும்பை:

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையானது நான்காவது நாளாக 3 லட்சத்தை தாண்டி உள்ளது. மகாராஷ்டிராவில் அதிக அளவிலான தொற்று பதிவாகிறது. கடந்த தின தினங்களாக தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மாநில மந்திரி நவாப் மாலிக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வதற்காக டெண்டர் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்கி அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. 
Tags:    

Similar News