ஆன்மிகம்
பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி

திருவந்திபுரம் கோவிலுக்கு வர தடை: பக்தர்கள் மொட்டையடிக்க சந்தை தோப்பில் ஏற்பாடு

Published On 2021-10-05 05:56 GMT   |   Update On 2021-10-05 05:56 GMT
கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா பந்தக்கால் உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா மற்றும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நேற்று முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா பந்தக்கால் உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாக்காலங்களில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றாலும் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்த இந்து சமய அறநிலையத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது, திருவந்திபுரம் சந்தை தோப்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
Tags:    

Similar News