ஆன்மிகம்
கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம்

Published On 2021-03-20 04:41 GMT   |   Update On 2021-03-20 04:41 GMT
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.
கமுதியில் சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர். விழாவில் நாடார் உறவின் முறை முறைகாரர் மாயகிருஷ்ணன், அம்பலகாரர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 16 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

வருகிற 30-ந் தேதி கோவிலின் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். அன்று நள்ளிரவு கோவிலின் உள் மற்றும் வெளி பகுதிகளில் பக்தர்கள் உருண்டு கொடுத்தும், கோவிலை சுற்றி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

31-ந் தேதி ஏராளமானோர் உடல் முழுவதும் சேறுபூசி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மேலும் அக்கினிச்சட்டி, பால்குடம், பூப்பெட்டி, பூக்குழி இறங்குதல், கரும்பாலை தொட்டில், போன்ற நேர்த்திக் கடன்களும், 21, 51, 101 சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

அடுத்த மாதம் 2-ம்தேதி 2001 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 3-ந் தேதி முளைப்பாரி திருவிழாவுடன் பங்குனித்திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கமுதி சத்திரிய நாடார் உறவின் முறையார்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News