தொழில்நுட்பம்
ரெட்மிபுக் ப்ரோ

ரூ. 41,999 துவக்க விலையில் ரெட்மி லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-08-03 11:11 GMT   |   Update On 2021-08-03 11:11 GMT
ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் E Learning எடிஷன் லேப்டாப்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.


சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்ம்புக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் E Learning எடிஷன் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. புதிய லேப்டாப்களில் ரெட்மிபுக் ப்ரோ விலை உயர்ந்த மாடல் ஆகும். ரெட்மிபுக் ப்ரோ 1.8 கிலோ எடையில், 19.9mm அளவு தடிமனாக இருக்கிறது. 

ரெட்மிபுக் ப்ரோ மாடலில் 11th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை 8 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 3.5mm ஆடியோ ஜாக், SD கார்டு ஸ்லாட், USB 2.0, LAN, HDMI, இரண்டு USB 3.2 மற்றும் சார்ஜிங் போர்ட்கள் உள்ளன. 

கனெக்டிவிட்டிக்கு வைபை 5, ப்ளூடூத் 5 வழங்கப்பட்டுள்ளன. ரெட்மிபுக் ப்ரோ மாடலில் 46Whr பேட்டரி உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. மேலும் விண்டோஸ் பிரெசிஷன் டிரைவர், 720 பிக்சல் வெப்கேமரா, 100 cm-சதுர அளவில் டிராப்க்பேட் உள்ளது. 



ரெட்மிபுக் E Learning எடிஷனில் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே, 11th Gen இன்டெல் கோர் i3 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி எஸ்.எஸ்.டி. வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் ஒஎஸ் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தல் 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

இந்தியாவில் ரெட்மிபுக் ப்ரோ 8 ஜிபி + 512 ஜிபி விலை ரூ. 49,999 என்றும், ரெட்மிபுக் E Learning எடிஷன் 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 41,999 என்றும், ரெட்மிபுக் E Learning எடிஷன் 8 ஜிபி + 512 ஜிபி விலை ரூ. 44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுக சலுகையாக புதிய லேப்டாப்கள் முறையே ரூ. 46,999, ரூ. 39,499 மற்றும் ரூ. 42,499 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புதிய ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் E Learning எடிஷன் ப்ளிப்கார்ட், எம்.ஐ. ஹோம் மற்றும் எம்.ஐ. வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. விற்பனை ஆகஸ்ட் 6 மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

Tags:    

Similar News