உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் பொதுச் செயலாளர் இரா.காமராசு பேசினார்.

கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட பேரவை கூட்டம்

Published On 2022-05-05 07:33 GMT   |   Update On 2022-05-05 07:33 GMT
வேதாரண்யத்தில் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாகை மாவட்டச் சிறப்புப் பேரவைக் கூட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் புயல் குமார் தலைமை வகித்தார். எழுத்தாளர் புலவர் பாலையன் தொடங்கி வைத்தார். 

அமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் இரா. காமராசு, இன்றைய சமூகப் போக்கில் நிலவும் பிரச்னைகளும் கலை இலக்கிய தேவைகளும் குறித்து பேசினார். நாட்டார் வழக்காற்றியலில் தேடல்கள் குறித்து முனைவர் கனிமொழி செல்லத்துரை பேசினார்.

தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற கோவி.ராசேந்திரன், சுகன்யா, அமுதசுரபி, ஸ்ரீநிதி, திருக்குறள்களை எழுதி திருவள்ளுவர் ஓவியம் தீட்டிய நித்யா, பரதநாட்டியம் நிகழ்ந்திய கோமதி உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியில், மருத்துவர் அருட்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சம்பந்தம், கவிஞர் ராஜா, கோபிநாதன், பொறியாளர் மாதவன், வக்கீல் சதீஸ் பிரபு, கவிஞர் ஜெய.கந்தசாமி, நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வராசு, அ.மா.குணசீலன், தங்க.குழந்தைவேலு, கவிஞர் பாலு தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு:

பேரவையில் அமைப்பின் சிறப்புத் தலைவராக பாலையன் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக புயல் சு.குமார், செயலாளர் தென்னடார் அம்பிகாபதி, பொருளாளர் கைலாசம், துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், பார்த்தசாரதி, துணைச் செயலாலர்கள் சதீஸ்பிரபு, அருள்முருகன் உள்பட 33 பேர்களைக் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்ய்ப்பட்டது.

கூட்டத்தில், சாத்தூரில் மே.20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாட்டில் சிறப்பாக பங்கேற்பது, 

நாகை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களை ஒருங்கிணைத்து தனி கலைக்குழுவாக ஏற்படு த்தவும், படைப்பாளர்களின் பட்டியல் தயாரிப்பது, மாதம் ஒரு முறை இளம் படைப்பாளர் கனக்கு படைப்புகள் உருவாக்கம் குறித்த வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

நலிந்துவரும் நாட்டுப்புறக் கலைஞர்க ளுக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடை ஏதுவாக தமிழக அரசின் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும், துளசியாப்பட்டினம் ஒளவையார் கோயிலில் அரசு எடுக்கும் ஒளவை விழாவை எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தவும், ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பா டுகளை பிரதிபலிக்கும் நாட்டுப்புறவியலை தனி பாடத் திட்டமாக கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழக அரசை வலியுறுத்தி நின்றவேற்றப்பட்டது.

Tags:    

Similar News