செய்திகள்
கொரோனா பரிசோதனை

புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை 4 லட்சத்தை தாண்டியது

Published On 2020-11-30 03:18 GMT   |   Update On 2020-11-30 03:18 GMT
புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை 4 லட்சத்தை தாண்டியது. நேற்று புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. அதன்படி கடந்த 2 மாதமாக கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 926 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று இறப்பு எதுவும் இல்லை. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லட்சத்து 323 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 129 பேருக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. 36 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

480 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 178 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 302 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 35 ஆயிரத்து 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 609 பேர் பலியாகி உள்ளனர். இதில் 499 பேர் புதுச்சேரியையும், 59 பேர் காரைக்காலையும், 44 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 10 நாட்களாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைவது 97.05 சதவீதமாகவும் உள்ளது.

இந்த தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News